இனப்படுகொலை விடயத்தில் நாமல்! பிரித்தானியாவில் தமிழ் மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி
இலங்கையினுடைய ஆட்சி அதிகாரத்தில் இனப்படுகொலையாளிகளை தமிழ் மக்கள் மிகக் கவனமாகப் பார்க்க வேண்டும் என பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இனப்படுகொலை செய்தவர்களை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களிடம் உள்ள பண்பாட்டு ரீதியான விடயமாக உள்ள பழிதீர்த்தலின் ஊடாக இனப்படுகொலை செய்தவர்களை இனங்கண்டு கொண்டால் தமிழ் மக்களுக்கான விடுதலை மற்றும் நீதி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இனப்படுகொலை விடயத்தில் நாமல் ராஜபக்சவை கவனமாகப் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,இரண்டு சர்வதேச பல்கலைக்கழகங்கள் நாமல் ராஜபக்சவை உரையாற்றாமல் தடுத்தது தமிழ் மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,