மின் கட்டணம் செலுத்தாத நாமல்! 25 இலட்சத்தை வழங்க தயாராகும் இராஜாங்க அமைச்சர்
நாமல் ராஜபக்ச மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய பணத்தை தான் செலுத்த தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து இவ்வாறு 25 இலட்சம் ரூபாவை தான் செலுத்த தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காக மின்சார சபைக்கு இதுவரை பெருந்தொகை பணம் செலுத்தப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் நளின் ஹெவகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
25 இலட்சம் செலுத்தத் தயார்

எனினும், இவ்வாறான சம்பவத்துடன் தொடர்புடைய மின்சாரக் கட்டணம் இதுவரை தமக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இந்த நிலையில், அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 25 இலட்சம் ரூபாவை செலுத்தத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச அல்லது மகிந்த ராஜபக்ச கோரினால் இந்த தொகையை தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து செலுத்த தயாராக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 10 மணி நேரம் முன்
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri