மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும்: நாமல் ராஜபக்ச

Batticaloa Namal Rajapaksa Sri Lanka
By Kumar Sep 10, 2024 02:49 PM GMT
Report

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் என்றும் அதற்கு தான் உதவி செய்வதாகவும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (10.09.2024) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இராஜாங்க அமைச்சர் ஐவர் பதவி நீக்கம்

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இராஜாங்க அமைச்சர் ஐவர் பதவி நீக்கம்


கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணம் எனது தந்தையின் காலத்திலேயே அதிகமான அபிவிருத்திகளை கண்டது.

தெற்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளைப் போன்று கிழக்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எமது அரசாங்கத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் என நான் உறுதியளிக்கின்றேன்.

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும்: நாமல் ராஜபக்ச | Namal Rajapaksa Presidential Election Meeting

இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் என்பன முன்னேற்றம் அடையும் இங்குள்ள விவசாயம், கடற்றொழில் என்பனவற்றிற்கு ஏற்றுமதி மூலம் உலக சந்தையில் தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

எங்களது தேவை இந்த நாட்டை அபிவிருத்தியுடைய நாட்டாக மாற்ற வேண்டும் என்பதும் இங்குள்ள இளைஞர்களுக்கு பலமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

இங்குள்ள அரசியல்வாதிகள் இன மத ரீதியான பணிகளே முன்னெடுத்து வருகின்றனர்.

ஏற்படவுள்ள மாற்றத்தினை பற்றி பிழையான தகவல்கள் வழங்க முடியாது ஆனால் இவர்களுக்கான நல்ல ஒரு எதிர்காலத்தை என்னால் வழங்க முடியும் என உறுதி கூறுகின்றேன்.

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும்: நாமல் ராஜபக்ச | Namal Rajapaksa Presidential Election Meeting

இலங்கையிலுள்ள கலாச்சாரங்களை இங்குள்ள இளைஞர் யுவதிகளைப் பற்றி எவருமே சிந்திப்பதில்லை.

இலங்கையிலுள்ள கலாசாரங்களை பௌத்த கலாசாரத்துக்கு சமனாக கிழக்கு மாகாண கலாசாரங்களையும் என்னால் பாதுகாக்க முடியும் என உறுதி கூறுகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இறுதியும் உறுதியுமான முடிவுக்கு தயாராகும் இலங்கை தமிழரசுக் கட்சி

இறுதியும் உறுதியுமான முடிவுக்கு தயாராகும் இலங்கை தமிழரசுக் கட்சி

இரண்டாம் விருப்பு வாக்கு தொடர்பில் ரணில் - அநுர உடன்படிக்கை: வெளிப்படுத்தும் சஜித்

இரண்டாம் விருப்பு வாக்கு தொடர்பில் ரணில் - அநுர உடன்படிக்கை: வெளிப்படுத்தும் சஜித்

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US