அரசியலில் தொடரும் நெருக்கடி: ராஜபக்சர்களுக்கு விரட்டப்பட்ட தோசம்
பொதுஜன பெரமுன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தோசம் நீக்கும் நோக்கில் சலுபாலி எனப்படும் சாந்தி கர்மம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் பெலியஅத்த தொகுதி சபைக் கூட்டத்தின் இறுதியில் இந்த சாந்தி கர்மம் செய்யப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தொகுதி சபைக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் பெலியத்த புவக்தன்டாவ பிரதேசத்தில் நடைபெற்றது.
சாந்தி கர்மம்
இதன்போது, அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த, டி.வி.சானக்க, தேனுக விதானகம திஸ்ஸ குட்டியாராச்சி டபிள்யூ.டி. வீரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சபைக் கூட்டத்தின் இறுதியில் சலுபாலி எனப்படும் சாந்தி கர்மம் செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன மற்றும் நாமல் ராஜபக்சவின் தோசம் நீக்கவே இந்த நிகழ்வு இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan