முடிந்தால் தேர்தல் ஒன்றை நடத்திப்பாருங்கள்! அரசாங்கத்துக்கு நாமல் ராஜபக்ச சவால்
முடிந்தால் தேர்தல் ஒன்றை நடத்திக் காட்டுமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஆதரவாளர்களுடான சந்திப்பொன்றின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.
நாமல் ராஜபக்ச சவால்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரசாங்கம் தனது தோல்விகளை மறைத்துக் கொள்ள சிறைச்சாலையில் இருந்த பிள்ளையானை பார்வையிடுவதற்காக நான் சென்ற விடயத்தை தூக்கிப் பிடிக்க முயற்சிக்கின்றார்கள். நான் பிள்ளையானைப் பார்க்கச் சென்றது உண்மைதான். அதனை நான் மறுக்கவில்லை.
அதற்கு உங்களால் என்ன செய்ய முடியும்? முடிந்தால் தேர்தல் ஒன்றை நடத்திப் பாருங்கள், மக்களின் ஆதரவு உங்களுக்கு எந்தளவுக்கு உள்ளது என்பது அப்போது தெரியும் என்றும் நாமல் ராஜபக்ச தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.