பழைய சம்பவங்களுக்கு வழக்குத் தொடரக் கூடாதாம்! நாமல் கைது தொடர்பில் ரணில் தரப்பின் வியாக்கியானம்
ஏழு, எட்டு ஆண்டுகள் பழைய சம்பவங்களைக் கிளறி வழக்குகளைத் தொடுப்பது தவறான முன்னுதாரணம் என்றும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஐக்கயி தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்த்தன விமர்சித்துள்ளார்.
எயார்பஸ் விமானக் கொள்வனவு சம்பவத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவைப் பார்வையிடுவதற்காக வஜிர அபேவர்த்தன நேற்று திங்கட்கிழமை (07) மாலை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார்.
ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்
அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது,
இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பாலும் விசாரணைகள் நிறைவடைய முன்னரே சந்தேக நபர்களைக் கைது செய்யும் வழக்கமொன்று காணப்படுகின்றது.

அதன் காரணமாக இலங்கையில் நூறுபேர் கைது செய்யப்பட்டால் அதில் 98 பேர் நிரபராதிகளாக வெளியே வந்து விடுகின்றனர்.
ஆனால் ஜப்பானில் 100 பேர் கைது செய்யப்பட்டால் 98 பேர் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 100 பேர் கைது செய்யப்பட்டால் 57 பேர் குற்றவாளிகளாக தண்டிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் ஏழு அல்லது எட்டு வருடங்கள் பழைமையான சம்பவமொன்றின் அடிப்படையில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல், கைது செய்யப்படுவது தவறானது. அது ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.
அவ்வாறான சம்பவங்கள் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும். அதன் காரணமாகத் தான் நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam