சற்று முன்னர் FCIDஇலிருந்து வெளியேறிய நாமல்
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாக்குமூலம் அளித்த பின்னர், சற்று நேரத்திற்கு முன்பு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார்
நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, இன்று காலை (21) FCIDஇற்கு வருகை தந்த நிலையில் அந்தப் பிரிவால் நடத்தப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக FCIDஇல் முன்னிலையானார்.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று காலை (21) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் தொடர் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்கவே அவர் முன்னிலையாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
