நாமல் ராஜபக்ஷவின் திட்டம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பொருத்தமான வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாவிட்டால், தேர்தலில் போட்டியிட தான் தயார் என நாமல் ராஜபக்ஷ செயற்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
கடந்த 07 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பாக கட்சியின் உத்தியோகபூர்வ உடன்பாடு எட்டப்படவில்லை என்பதுடன் எவரும் எதிர்த்ததாக தெரிவிக்கப்படவில்லை.
நாமலின் செயற்பாடு
அக்கட்சியின் தேசிய அழைப்பாளராக ரோஹித அபேகுணவர்தனவின் பெயரையும் நாமல் ராஜபக்ச முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் எவ்வித தயக்கமும் இன்றி பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், நாமல் ராஜபக்சவின் உள்நோக்கம் குறித்து செயற்குழு உறுப்பினர்கள் குழப்ம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
