தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு - சஜித்துடன் முரண்பட்டு கோபமாக வெளியேறிய நாமல்
சமகால அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து பலமான எதிர்க்கட்சியை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை எடுத்திருந்தார்.
எனினும் சஜித் பிரேமதாஸவின் தீர்மானங்கள் காரணமாக தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் கோபம் அடைந்த நாமல்
பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது கடும் கோபம் அடைந்த நாமல் ராஜபக்ச அங்கிருந்து இடைநடுவில் வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் கட்சித் தலைவர்களின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
திட்டமிடப்பட்ட நடவடிக்கை
எனினும், கூட்டத்தின் இடையில் நாமல் ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது முற்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கை என கூறியபடியே நாமல் கோபமாக வெளியேறியதாக கூறப்படுகிறது.
எனினும் நாமல் அவ்வாறு கூறியதற்கான காரணம் தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri