நாமல் மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு! விரைவில் பதில்..
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டப் பட்டம் தொடர்பாக புதிதாக வெளிவந்துள்ள சர்ச்சைகள் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு, அந்த அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை என்று அவர் மறுத்துள்ளார்.
தம்மீது சுமத்தப்படும் அவதூறுகளுக்குரிய பதில்களை எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள அரசுக்கு எதிரான பேரணியில் நாடு முழுவதும் காண முடியும் என்று நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
நுகேகொடை பேரணி
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இந்த அரசு பதவிக்கு வந்த சில வாரங்களிலேயே நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்து, எனது பட்டப் படிப்பு குறித்து விசாரணை நடத்த அனுமதி பெற்றது.

அதன் பின்னர் பல மாதங்களாக இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இன்று வரை எந்த விசாரணை முடிவுகளும் வெளியிடப்படவில்லை.
எனினும், இணையத்தளங்கள் ஊடாக அவதூறு பரப்பப்படுகின்றது. இப்போது நுகேகொடை பேரணி தொடர்பில் அரசு மிகுந்த அச்சத்தில் உள்ளது. அதனால் பொய்யான வதந்திகளைப் பரப்புகின்றார்கள். இந்த அவதூறுகள் மற்றும் பழிகளுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி பதில் கிடைக்கும்"என்றார்.
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam