குற்றவாளிகளின் பின்னணியில் இருப்பவர்களை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும்
குற்றவாளிகளின் பின்னணியில் இருப்பவர்களை இந்த அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செவ்வந்தியை நேபாளத்தில் வைத்து கைது செய்ததாகவும் அவரை இலங்கைக்கு அழைத்து வர முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது என நாமல் தெரிவித்துள்ளார்.
செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்து வருவது நல்ல விடயம் என தெரிவித்துள்ளார்.
இந்த திட்டமிட்ட குற்ற கும்பல்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள்? அவர்களுக்கு யார் உடந்தையாக செயல்படுகின்றார்கள் என்பது குறித்து இந்த நாடு தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அந்த தகவல்களை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடற்படை தளபதி நிஷாந்த உலுகஹாதென்ன கைது விவகாரம் போல் அழுத்தங்களுக்கு மத்தியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
நிசாந்த கைதின் போது அரசியல் தலையீடுகள் இடம் பெற்றதாக நாங்கள் கேள்விப்பட்டோம் என தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதானிகள் இரண்டு போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு போலி சாட்சிகளை அளிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றவாளிகள் அனைவரும் இந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலேயே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் 17 போலி கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டதாக துறைசார் பிரதி அமைச்சரே ஒப்புக்கொண்டு உள்ளார் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அதேபோன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு கொள்கலன்களில் போதைப் பொருள் இருந்ததாக அரசாங்கம் ஒப்புக்காண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத கொள்கலன்களில் எவ்வாறான பொருட்கள் இருந்திருக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கம் பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.





காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
