ராஜபக்சர்களுக்குள் முறுகல்: கோட்டாபய மீது நாமலுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
கோட்டபாய தொடர்பில் நாமலுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சேதன பசளைத் திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியவர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்டத்தை முன்னெடுத்த மூன்றாம் தரப்பினரால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹிரியால தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உரத் திட்டமே தோல்விகளுக்கு முக்கிய காரணமாகியுள்ளது. இதனைச் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
