நாமலிடம் ரணில் பேசிய இரகசியம் அம்பலம்
சமகால அரசியலில் வலுவான எதிர்க்கட்சி ஒன்றை ஏற்படுத்தி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரணில், நாமலின் சந்திப்பு தொடர்பான காணொளி வெளியாகி இருந்தது.
பொது நிகழ்வு ஒன்றின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், நாமல் ராஜபக்சவும் மிகவும் நெருக்கமாக கலந்துரையாடல் காணொளி பேசுபொருளாகியது.
கொழும்பில் விடுதலைப் புலிகள் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் - அநுர அரசின் விசாரணையில் அம்பலமான உண்மை
திருமண நிகழ்வு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரின் திருமண நிகழ்வு கடந்த புதன்கிழமை இரவு சினமன் லைப் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது நாமல் ராஜபக்சவுடன் ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய ராஜபக்சவும் உரையாடும் விதத்தை பலரும் அவதானித்தனர்.
கிராம வேலைத்திட்டம்
ரணிலுடன் பேசப்பட்ட விடயம் தொடர்பில் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு நாமல் பதிலளிக்கையில், தற்போதைய அரசியல் செயற்பாடு குறித்து ரணில் கேள்வி எழுப்பியிருந்தார்.
கிராமத்திற்கு கிராமம் வேலைத்திட்டத்துடன் நாடு முழுவதும் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
தனிப்பட்ட விடயங்களை குறித்து உரையாடியதுடன், விரைவில் நேரடியாக இணைந்து பணியாற்றுவோம் என ரணில் குறிப்பிட்டதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO