இராணுவப் பதக்கங்களை உலோகத் துண்டுகள் என்பது வெட்கக்கேடு : நாமல் விமர்சனம்
போர் வீரர்களின் பதக்கங்களை 'உலோகத் துண்டு' என்று வர்ணிக்கும் சமீபத்திய செயற்பாடுகள், இலங்கையின் போர் வீரர்கள் செய்த தியாகங்களையும் சாதனைகளையும் குறைத்து மதிப்பிடுவதாகும் என்று நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார்.
மாத்தறை, கொட்டபொலவில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெரும் பதற்றம்! 15 பேர் பலி - பலத்த காயங்களுடன் பலர் சிறைக்குள்: அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு
இராணுவ வீரர்கள் செய்த தியாகங்கள்
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் வென்ற பதக்கங்கள் அவர்களின் வீரம், அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பிரதிபலிப்பதால், அவற்றுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.

'போர் வீரர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பெருமையுடன் காட்டும் ஒரு பதக்கத்தை, வெறும் 'உலோகத் துண்டு' என்று வர்ணிப்பது வெட்கக்கேடானது. இத்தகைய கூற்றுகள் இராணுவ வீரர்கள் செய்த தியாகங்களைப் புறக்கணித்துள்ளன.
முன்னாள் பாதுகாப்புப் படையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் அரசாங்கம் போர் வீரர்களை அவமதித்து வருகின்றது.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண
ஆயுதப் படைகளின் உறுப்பினர்களின் கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் களங்கப்படுத்தும் முயற்சி உள்ளதா என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தற்போதைய அரசாங்கத்தால் முடியவில்லை.
முந்தைய அரசாங்கங்களால் தொடங்கப்பட்ட பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களின் முழுப் பலன்களையும் தற்போதைய அரசாங்கம் அறுவடை செய்யத் தவறிவிட்டது என்றும் நாமல் ராஜபக்ச தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.