பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிடும் நாமல்
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் செயற்பாடுகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் முன்னிலையில் வீதியில் பொலிஸாரை தாக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசுக்கு பொலிஸ் மா அதிபர் சேவை செய்து வருவதாகவும் அதற்காக அவர் வெட்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் நாட்டின் பொலிஸ் திணைக்களத்தின் தலைவராக அல்ல; “தேசிய மக்கள் சக்தி அரசின் பொலிஸ் மா அதிபராகவே செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.
இத்தகைய சம்பவங்களால் அரசியல் அழுத்தம் மற்றும் பழிவாங்கல் அச்சம் காரணமாக பொலிஸ் அதிகாரிகள் தங்களது கடமைகளை சுயாதீனமாக நிறைவேற்ற தயங்கும் நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒருகாலத்தில் ராஜபக்ச குடும்பத்தை போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது கஞ்சா செய்கையுடன் தொடர்புடையவர்களாக இருப்பதாக நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டினார்.
தேசிய மக்கள் சக்தி அரசைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமானதாக கூறப்படும் கஞ்சா தோட்டத்தில் சோதனை நடத்திய பொலிஸ் அதிகாரிகள் தொந்தரவு செய்யப்பட்டதாகவும், அந்தச் சோதனையில் ஈடுபட்ட ஒரு அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே நாடாளுமன்ற உறுப்பினர் பின்னர் வீதியில் மற்றொரு பொலிஸ் அதிகாரியையும் தாக்கியதாக நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டினார்.
மேலும், முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தொடர்புபட்ட வாகன விபத்து விசாரணையை மூடிமறைக்க அரசியல் தலையீடு செய்யப்பட்டதாகவும், அந்த விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட அமுலாக்கத்தில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan