தாஜூடீனை கொலை செய்தது யார்! நாமலின் கருத்தால் சூடுபிடித்த நாடாளுமன்றம்
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றுவரும் கிளீன் ஸ்ரீலங்கா விவாதத்தின் போது கருத்து தெரிவித்த மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கருத்துக்கள் ஆளும் தரப்பில் பெரும் வாத பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.
நாடாளுமன்றில் இன்றைய உரையின் போது நாமல் ராஜபக்ச, ''முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டத்தையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கு கிளீன் ஸ்ரீலங்கா என பெயரிடப்பட்டாலும் அது கோட்டபாய ராஜபக்சவின் எண்ணக்கருக்களை கொண்டமைந்துள்ளது.
போலியான விசாரணை
இந்த திட்டத்தில் முதலாவதாக, முச்சக்கர வண்டியின் சாரதிகளும், பேருந்து உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டனர்.
விபத்துக்களை ஏற்படுத்தும் அலங்கார பொருட்களை அகற்றவேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.
ஆனால் அந்த நடவடிக்கை தற்போது செயலிழந்துள்ளது. இது நிரந்தரமில்லாத திட்டமிடல் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மக்களுக்கான நிரந்தரமான திட்டத்தை முன்வையுங்கள். இது இன்று நிரந்தரம் இல்லாது போயுள்ளது.
மேலும் ராஜபக்சர்கள் மீது போலியான விசாரணைகள் இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. இது நீதிக்கு புறம்பானது.
இராணுவத்தின் பொறுப்பிலுள்ள ஆயுதங்கள் மாயமாகியுள்தாக தெரிவித்துள்ளார். இது பததுகாப்பு துறையை கேள்விக்குள்ளாக்கும் கருத்து'' என நாமல் குற்றம் சுமத்தினார்.
தாஜூடீன் கொலை
இதன்போது குறுக்கிட்ட பொது பாதுகாப்பு அமைச்சர், எமது விசாரணைகள் போலியானவை அல்ல. தாஜூடீனை கொலை செய்தது யார்? அதேபோல லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது யார்? கொலையாளிகள் நாடாளுமன்றத்தில் இவ்வாறான கருத்துக்களை கூறுவது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டார். அத்துடன், அந்த உண்மைகளை இந்த நாடே அறியும் எனவும் சபையில் பொது பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து கருத்து தெரிவித்த நாமல்,
“குறித்த காலப்பகுதியில் தற்போதையை பொது பாதுகாப்பு அமைச்சரே பாதுகாப்பு துறையில் உயர் பதவியில் இருந்தார்.
அப்படியானால், தற்போது, முன்வைக்கும் இந்த குற்றச்சட்டுகள் அவர் பதவியில் இருந்தபோது ஏன் வெளிவரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |