அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு விடுக்கப்பட்ட சவால்! மீண்டும் நினைவூட்டும் நாமல்
தனது சட்டக் கல்லூரி பரீட்சை தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு விடுத்த சவால் என்னவானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
சட்டத்தரணிகளுக்கான பரீட்சையை சட்டக் கல்லூரியில் முறைகேடாக எழுதியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது அமைச்சர் வசந்த சமரசிங்க சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் வைத்து குற்றம் சுமத்தியிருந்தார்.
சவால்
அதற்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ச , அதனை நிரூபிக்குமாறு சவால் விடுத்திருந்தார்.
அவ்வாறு நிரூபித்தால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் அவ்வாறில்லையேல் அமைச்சர் வசந்த சமரசிங்க தனது அமைச்சுப் பதபதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில் தனது சவால் குறித்து மீண்டும் நாமல் ராஜபக்ச நினைவூட்டியுள்ளார்.
அமைச்சர் வசந்த சமரசிங்கவின் கட்சிக்கு பொதுமக்கள் பாரிய மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். அதனைக் கொண்டு எதனையும் இலகுவாக செய்து கொள்ள முடியும். அவ்வாறிருக்கையில் தான் சவால் விடுத்து மாதங்கள் கடந்தும் மௌனமாக இருப்பது ஏன் என்று நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 22 மணி நேரம் முன்

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
