கைதாவாரா நாமல்: 21ஆம் திகதி நடக்கப் போவது என்ன..!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பில் வெளியாகிய செய்திகள் இன்றைய தினம் மிகப்பெரும் பேசுபொருளாக அமைந்தது.
அதாவது நாமலினுடைய சட்டத்துறை சார்ந்து இருக்கக்கூடிய விவகாரங்கள் போலியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்சவின் சட்டக்கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை என்ற தகவலை நாடாளுமன்ற பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தியிருந்ததோடு, நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என்பதை அம்பலப்படுத்தியிருந்தார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட சான்றிதழை முதுகலைப் பட்டத்திற்கு பதிவு செய்வதற்காக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நாமல் சமர்ப்பித்துள்ளார்.
அதில் 2009 செப்டெம்பர் 15 ஆம் திகதியன்று வழங்கப்பட்ட சட்டக் கல்விக்கான சான்றிதழில், 54 நாட்களுக்கு முன்னர் பதவி விலகிய துணைவேந்தர் கையொப்பமிட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |