அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் நாமல்
வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் காணப்பட்ட போதிலும் அதனை தான் பயன்படுத்திக் கொள்ளவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ச அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு நாடு திரும்பியிருந்தார்.
வெளிநாடு சென்று நாடு திரும்பும் அனைவரும் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு அமைய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டியது அவசியமானதாகும்.
அந்த வகையில் அமைச்சர் நாமல் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதனை தவிர்த்து அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி வருகின்றார்.
இந்த நிலையில், மனைவி மற்றும் பிள்ளையின் நலனை கருத்திற் கொண்டு தாம் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதனை தவிர்த்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தான் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் வீடு சென்று விட்டதாக சில சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.