மொரட்டுவ மாநகர முதல்வர் விவகாரம்! - மன்னிப்பு கோரினார் அமைச்சர் நாமல்
மொரட்டுவ மாநகர முதல்வர் சமன்லால் பெர்ணான்டோ, பெண் மருத்துவர் ஒருவரை அச்சுறுத்திய சம்பவத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மன்னிப்பை கோரியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இது தொடர்பில் தாம் மன்னிப்பைக் கோருவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தடுப்பூசிகள் செலுத்தும் நிலையம் ஒன்றில் வைத்தே இந்த அச்சுறுத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள மொரட்டுவ மாநகர முதல்வர் சமன்லால் பெர்ணான்டோவை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவ நீதிவான் இன்று உத்தரவிட்டார்.
இந்தநிலையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது நாமல் ராஜபக்ச இந்த சம்பவத்துக்காக மன்னிபைக் கோரினார்.
இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தடுப்பூசித்திட்டம் சிறப்பாக செயற்படுத்தப்படுகின்ற நிலையில் சிறு சம்பவம் முழுத்திட்டத்தையும் தகர்த்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri