'நாம் 200' நிகழ்வு குறித்து மற்றுமொரு சர்ச்சைக்குரிய கருத்து
இலங்கையில் இடம்பெற்ற நாம் 200 நிகழ்வில் பங்கேற்பதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே,அதில் பங்கேற்க முடியவில்லை என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் தாம் பங்கேற்கவிருந்த போதும், அதற்கான அனுமதி பிந்தியே கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வுக்கான அனுமதி
நவம்பர் 2ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கான அனுமதி, இந்திய வெளியுறவு அமைச்சிடம் இருந்து முதலாம் திகதி இரவு 9.30 அளவிலேயே தமக்கு கிடைத்தது எனினும் பயணம் சாத்தியமில்லை என்ற அடிப்படையில் அந்த நேரத்துக்கு முன்னதாகவே, தாம் பயணத்துக்கான வானூர்தி அனுமதியை ரத்துச் செய்து விட்டதாக தமிழக அமைச்சர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், 2ஆம் திகதியன்று முற்பகல்11 மணிக்கு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமிழக முதல்வரின் உரை அடங்கிய காணொளி 2 மணித்தியாலங்களுக்குள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த காணொளி நிகழ்வில் ஒளிபரப்படாமைக்கு மத்திய அரசாங்கத்தின் அழுத்தமே காரணம் என்று தமிழகத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றச்சாட்டு
இந்த குற்றச்சாட்டை இலங்கையின் அமைச்சர் ஜீவன் தொண்டமான், மறுத்துள்ளார்.
நிகழ்வு மாலை 4 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில் தமிழக முதல்வரின் உரை அடங்கிய காணொளி, பிற்பகல் 2மணிக்கே கிடைத்தது எனவே தொழில்நுட்ப ரீதியில் தரவேற்றம் செய்து அதனை நிகழ்வில் ஒளிபரப்ப முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மத்திய அரசாங்கத்தில் இருந்து யாரும் தம்முடன் தொடர்புகொள்ளவில்லை என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
