நல்லூரானின் 290 வருட புதிர் அறுவடை நிகழ்வு
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று (24.1.2024) காலை நடைபெற்றுள்ளது.
தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும், சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்கு செல்வார்கள்.
290ஆவது புதிர் அறுவடை நிகழ்வு
அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தசுவாமியாருக்கு படையல் செய்து பூசைகள் செய்வது வழக்கமாகும்.
அவ்வாறே இம்முறையும் இடம்பெற்ற அமுது படையலானது பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழிபாட்டு முறையானது கோயிலின் மரபாகவும் பண்பாட்டு விழாவாகவும் பேணப்பட்டு வருகிறது.
அத்துடன் இப்புதிர் விழா 290 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


