வரலாற்று சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்! திரண்டுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் (Video)

Jaffna Nallur Kandaswamy Kovil Sri Lankan Peoples
By Mayuri Aug 25, 2022 03:52 AM GMT
Report

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் வெகு விமர்சையாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 6.15 மணியளவில் வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்றிருந்தது. 

இந்த நிலையில் கந்தப்பெருமான் சித்திர தேரிலே பவனி வருகின்ற காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்


வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 2ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்! திரண்டுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் (Video) | Nallur Kovil Festival

பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி இடம்பெற்ற நிலையில் காலை 10 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் மஞ்சள்திருவிழா கடந்த 11ஆம் திகதி நடைபெற்றிருந்தது.

இதேவேளை கடந்த 18ஆம் அருணகிரிநாதர் உற்சவமும், 19ஆம் திகதி கார்த்திகை உற்சவமும், நேற்று மாலை சப்பறத் திருவிழாவும் இடம்பெற்றிருந்தது. மேலும் நாளைய தினம் தீர்த்தத்திருவிழா இடம்பெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இதேவேளை நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்த்து கொள்ளுமாறு வட மாகாணத்துக்கு பொறுப்பான மூத்த பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்! திரண்டுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் (Video) | Nallur Kovil Festival

கடந்த வருடம் கோவிட் 19 நோய்த்தொற்று பரவல் காரணமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்றது.

எனினும் இம்முறை வழமை போன்று பெருந்திரளான அடியவர்கள் பங்கேற்பர். வெளிநாடுகளிலிருந்தும் பல ஆயிரக்கணக்கானோர் நல்லூரானை தரிசிக்க வருகை தந்துள்ளனர்.

அதனால் திருடர்களின் கைவரிசை அதிமாக இருக்கும். அத்துடன், வீட்டில் ஒருவராவது தங்கியிருப்பதுடன் அல்லது பாதுகாப்பாக வீட்டை மூடி ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். வழமைபோன்று சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்! திரண்டுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் (Video) | Nallur Kovil Festival

எனினும் திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட்டு அடியவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்கள் தமது தங்க நகைகள் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இயன்றளவு நகைகளை அணிவதைக் குறைப்பதுடன் பணத்தினை எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும்,பெருமளவு பொலிஸார் உற்சவ காலக்கடமையில் அமர்த்தப்பட்டுள்ள போதும் பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல் - தீபன்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US