நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற சூரன்போர்
கந்தஷஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிட்டு நாட்டின் பல இடங்களில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிலையில், மட்டக்களப்பு,ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு சிற்ப்பாக நடைபெற்றது.
ஐந்து தினங்கள் பக்தர்கள் விரதமிருந்து கந்தசஸ்டி விரதம் அனுஸ்டித்ததுடன் தினமும் ஆலயத்தில் கந்தபுராண படலம் பாடும் நிகழ்வும் நடைபெற்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும்
இதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் சூரன்போர் இடம்பெற்றது.

வவுனியாவில் பிரசித்தி பெற்ற வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்கார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இதேவேளை, வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோவில், நெளுக்குளம் முருகன் ஆலயம், கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயம், பழனி முருகன் ஆலயம் உட்பட வவுனியா மாவட்டத்தில் உள்ள பல ஆலயங்களில் சூரசம்காரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




