நல்லூரில் களைகட்டும் சப்பறத்திருவிழா: முருகப்பெருமானை காண படையெடுக்கும் பக்தர்கள் (Live)
வேல் மூலவராகத் திகழும் திருத்தலம், ஆறுமுக நாவலரின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்கும் நல்லூர் கந்தன் ஆலய மகோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
தமிழர்களின் தனித்துவத்தையும் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களையும் உலக மக்களுக்கு உரத்துரைக்கும் ஒரு விழாவாகவே நல்லூர்க் கந்தன் ஆலய திருவிழா நோக்கப்படுகிறது.
அந்த வகையில் நல்லூர் கந்தனின் மகோற்சவ பெருவிழாவின் 23ஆம் நாள் இன்றாகும்.
இலங்கையின் வடக்கில் குடி கொண்டு வீற்றிருக்கும் அறுபடை வீடுடைய வள்ளி மணாளன் நல்லூர் முருகனின் மகோற்சவ பெருவிழாவானது கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
சப்பறத் திருவிழா
நல்லூர் முருகப்பெருமானின் மகோற்சவ தரிசனம் காண உள்நாட்டில் மட்டும் அல்லாது வெளிநாட்டில் இருந்தும் ஆயிரமாயிரம் பக்தர்கள் வருடாவருடம் வருகை தருவது வழக்கமாகும்.
அந்த வகையில் இன்றைய தினம் காலை பூஜையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இன்று காலை சிவப்பு பட்டாடை மற்றும் சிவப்பு நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் நந்தி வாகனத்தில் உள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளமை விசேட அம்சமாகும். இதேவேளை இன்று மாலை சப்பறத்திருவிழா களைகட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |