வள்ளி தெய்வானை சமேதராய் அருள்பாலிக்கும் கந்தன்! கார்த்திகை உற்சவம் (Live)
தமிழர்கள் செறிந்து வாழும் யாழ். நல்லூரில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாக எழுந்தருளி நிற்கிறது நல்லூர் கந்தசுவாமி ஆலயம்.
இத்தனை சிறப்பு மிக்க ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிலையில் 16ம் நாளான இன்று (05.09.2023) மாலை கார்த்திகை உற்சவம் இடம்பெறவுள்ளது.
நல்லூர்க்கந்தன் வள்ளி தெய்வானை சமேதராய் வீற்று அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பான பூஜை வழிபாடுகள் நேரலையாக,
இன்றைய தினத்திற்கான காலை பூஜை
ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் 16ம் நாளான இன்று (05.09.2023) மாலை கார்த்திகை உற்சவம் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது மஞ்சள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு நல்லூரான் நீல மயில் மீதேறி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர் News Lankasri