நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா விரைவில் ஆரம்பம்! மகோற்சவ ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

Jaffna Nallur Kandaswamy Kovil Sri Lankan Peoples
By Theepan Jul 26, 2022 09:28 AM GMT
Report

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ். மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மகோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று(26) காலை 9 மணியளவில் யாழ் மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கோவிட் தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் மகோற்சவம் வழமைபோன்று இம்முறை இடம்பெறுமென யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலுக்கு பின்னர் நல்லூர் ஆலய பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா விரைவில் ஆரம்பம்! மகோற்சவ ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல் | Nallur Kandaswamy Temple

போக்குவரத்து நடவடிக்கைகள்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ஆகஸ்ட் 1ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்துவிடப்படும்.

ஆலயவெளி வீதியை சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ண கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எந்த காரணம் கொண்டும் வாகனங்கள் உட்செல்ல முடியாது.

அதேபோல வெள்ளை வர்ணக்கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்த விதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது, ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவு செய்ய முடியாது, காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா விரைவில் ஆரம்பம்! மகோற்சவ ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல் | Nallur Kandaswamy Temple

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களை கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும்.அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

முகக்கவசங்களை அணிவது சட்டமாக்கப்படவில்லை. இருந்த போதும் கோவிட் எச்சரிக்கை காணப்படுவதால் முகக்கவசங்களை அணிந்து தன்னெழுச்சியாக சுகாதார விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா விரைவில் ஆரம்பம்! மகோற்சவ ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல் | Nallur Kandaswamy Temple

ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.

திருட்டுச் சம்பவங்களை தவிர்க்க நல்லூர் ஆலயச்சூழலில் யாழ்.மாநகர சபையினால் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.”

இந்த கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர்,மாநகர அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US