நல்லூரில் பல லட்சம் பக்தர்களுடன் நடைபெற்ற மஞ்சத்திருவிழா
யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத்திருவிழா நேற்றையதினம்(7) வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப்பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக்குமார சுவாமியாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள் பாலித்துள்ளார்.
இந்த அழகிய மஞ்சத்திலே முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.
கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.
20 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 21ஆம் திகதி தேர் திருவிழாவும் 22ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.





குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri