நல்லைக் கந்தனின் சூர்யோதய திருவிழா..!
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பத்தொன்பதாவது திருவிழாவான சூர்யோதய திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்த மண்டபத்தில் அருள் பாலிக்கும் அலங்கார முருகன், வள்ளி, தெய்வானைக்கு விஷேட, அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது.
பக்தர்கள்
பின்னர் முருகப்பெருமான் சூரியோதயப்பீடத்தில் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து உள்வீதி, வெளிவீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலயபிரதம குருவான சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்தனர்.
பல இடங்களில் வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

காருக்குள் 45 நிமிடம் உரையாடிய புடின் - மோடி: அமெரிக்காவின் டிரம்புக்கு உருவாகும் புதிய அழுத்தம்! News Lankasri
