முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவை நினைவுகூரும் நினைவேந்தல்
சமீபத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் வாழ்நாள் போராளியுமான இரா. நல்லகண்ணுவை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது 15.03.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாடு
தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நல்லகண்ணுவை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுடன் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்துகொண்டு நல்லகண்ணுவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், முன்னாள் வடமாகாணசபையின் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தலைமையில் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஆசிரியம் சஞ்சிகையின் ஆசிரியரும், சமூக செயற்பாட்டாளருமான தெ. மதுசூதனன் அவர்களின் சிறப்புரையும், அதனைத் தொடர்ந்து அரசியல் ஆய்வாளர் ம. நிலாந்தனின் உரையும், இடம்பெற்றது.
நினைவுரை
மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன் கலந்து கொண்டு நினைவுரையாற்றினார்.

உரையாற்றியவர்கள் தங்களது உரைகளில், தோழர் நல்லகண்ணு ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்கான ஆதரவு, பிரித்தானிய காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள், வாழ்நாள் முழுவதும் பொதுவுடமைப் போராளியாக செயல்பட்டமை, விவசாயிகளின் உரிமைகளுக்காக களத்தில் நின்ற செயற்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான போராட்டங்கள் மற்றும் கனிம வளக் கொள்ளைகளுக்கு எதிரான அவரது நிலைப்பாடு போன்ற பல்வேறு அம்சங்களை நினைவுகூர்ந்தனர்.
அவரது எளிமை, நேர்மை மற்றும் மக்கள் சார்ந்த அரசியல் பணி ஆகியவற்றையும் பேச்சாளர்கள் சிறப்பாக எடுத்துரைத்தனர்.
இதேவேளை, நல்லகண்ணுவை நினைவுகூர்ந்து ஈழத்தில் நடைபெற்ற முதல் நிகழ்வு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri