சிறை விடுப்பில் வீடு சென்றுள்ள நளினி
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையின் தண்டனை கைதியான நளினி ஒரு மாத சிறைவிடுப்பில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன் தமிழகம் -வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவர் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த சூழலில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக்கொள்வதற்காகத் தன் மகள் நளினியை, சிறை விடுப்பில் விடுவிக்க வேண்டும் என்று அவர் தாயார் பத்மா, சென்னை மேல்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதற்கு தமிழக அரசாங்கமும் ஒப்புதல் அளித்திருந்தது.
இந்தநிலையில் நளினி ஒரு மாத சிறை விடுப்பில் இன்று வெளியே வந்துள்ளார்.
முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 25-ம் திகதியும் ஒரு மாத சிறை விடுப்பின்கீழ் நளினி வீடு செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
