நளினிக்கு ஒரு மாத சிறை விடுப்பு! சென்னை நீதிமன்றம் அனுமதி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்கு உட்பட்டுள்ள நளினிக்கு ஒரு மாதம் “பரோல்” என்ற சிறை விடுப்பு வழங்க தமிழக அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நளினியின் தாயார் சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளமையால், தனது மகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, முன்னிலையான தமிழக அரசின் தலைமை குற்றவியல் சட்டத்தரணி, நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.