வேறு வேலைக்கு செல்லுங்கள்..! தபால் ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் எச்சரிக்கை
தபால் ஊழியர்களின் மேலதிக நேரக்கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் கைவிரல் அடையாளப்படுத்தலை கைவிடல் ஆகிய இரு கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது. குறித்த இரு செயற்பாடுகள் இல்லாத வேறு வேலைகளுக்கு அவர்கள் செல்லாம் என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றம் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடந்து உரையாற்றிய அவர், "தபால் ஊழியர்கள் முன்வைத்துள்ள 19 கோரிக்கைகளில் இரு கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது. அதைவிடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்தால் நாம் தயார். இதை இவ்வாறு விட்டு செல்ல முடியாது.
பணிபகிஷ்கரிப்பு
இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தபால் ஊழியர்களுக்கு 2027ஆம் ஆண்டு அதிகரிக்கப்படும் சம்பளத்திற்கு ஏற்ப மேலதிக நேரக்கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படுகின்றது.
அத்தோடு குறித்த சம்பள அதிகரிப்பு மற்றும் மேலதிக நேரக்கொடுப்பனவு, அனைத்து அரச ஊழியர்களுக்காகவும் எடுக்கப்பட்ட தீர்மானம். தபால் ஊழியர்களுக்கு மட்டும் எப்படி அதிகரிக்க முடியும். சம்பளம் அதிகரிக்கப்பட்டு மேலதிக நேரக்கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதைவிட என்ன செய்ய வேண்டும். இது கொழும்பு மத்திய பரிவர்த்தனை நிலையத்தில் உள்ள சில அரசியல் சார்ந்த தொழிற்சங்களின் கோரிக்கையாகும். ஏனைய சில உப அஞ்சல் நிலையங்கள் வழமைப்போல் இயங்குகின்றன. இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு நடைபெறுகிறது.
அவர்களின் இதர கோரிக்கையான பணியாளர்கள் பற்றாக்குறை, வாகனங்கள் குறைப்பாடு போன்ற கோரிக்கைகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தபால் திணைக்களம் நஷ்டத்திலேயே இயங்குகிறது.
இருந்தும் நாம் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சித்துள்ளோம். மேலதிக நேரக்கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் கைவிரல் அடையாளப்படுத்தலை கைவிடல் போன்ற நடவடிக்கைகளுக்கு விருப்பம் இல்லாதவர்கள் வேறு வேலைகளை தேடிக் கொண்டு போகலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக மேலும் இருவர் மனு தாக்கல்!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



