நம்பிக்கையில்லா பிரேரணை: கையொப்பமிடாத எம்.பிகள் பகிரங்கப்படுத்திய அமைச்சர்
புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிராகவும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடவில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22.01.2026) நடைபெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
கையொப்பமிடாத எம்.பிக்கள்
தமிரசுக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஹிஸ்புல்லா எம்.பி உட்பட பலர் கைகொப்பமிடவில்லை.அன்று எதிர்க்கட்சி தலைவர் சொன்னார், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பலர் கையொப்பமிடவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால் பிரேரணைக்கு 20 எம்.பிக்கள் கையொப்பமிட்டால் போதுமானதாகும்.இது தொடர்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் போது 20 எம்.பிக்களுக்கு மேற்பட்டோர் இருந்தனர்.
அதிலும் மூன்று எம்.பிக்கள் கையொப்பமிட்டவில்லை என்றே தோன்றுகிறது.அதனால் நாம் வினயமாக கேட்டுக் கொள்வது அதை கொண்டுவாருங்கள்.
சஜித் பிரேமதாச உட்பட சிறு குழுவின் சூழ்ச்சிகளுக்கு அகப்படாமல் தனது மனசாட்சிக்கு உட்பட்டு செயற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இன்று என்ன நடந்துள்ளது.

இன்று பிரேரணைக்கு கையொப்பமிடாத எம்.பிக்களுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
தயாசிறி ஜயசேக்கர எம்.பி,அரசியலமைப்பு சபையை தொடர்புபடுத்தி சிவஞானம் சிறிதரன் எம்.பிக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் பேசியது பிரேரணைக்கு கையொப்பம் இடாததை நோக்காக கொண்டதாகவே எமக்கு தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri