கோவிட் தொற்று நோயே அரசாங்கத்தின் இறுதி முடிவின் அடையாளமாக மாறும்! - ஜே.வி.பி

Covid-19 Corona Virus Press Meet Janatha Vimukthi Peramuna Nalin Hewage
By Steephen Apr 26, 2021 05:11 AM GMT
Report

கோவிட் தொற்று நோயை பயன்படுத்தி அரசாங்கம் தனது தனிப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்தும் செயற்பட்டால், கோவிட் தொற்று நோயே அரசாங்கத்தின் முடிவின் அடையாளமாக மாறுவதை தவிர்க்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நளின் ஹேவகே நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கோவிட் தொற்று நோயுடன் அரசாங்கம் புலி வந்து விட்டது என்று கூறும் விளையாட்டை ஆரம்பித்துள்ளது. தேர்தலை நடத்தும் நேரத்தில் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதால் நாட்டை முடக்க தேவையில்லை என்று கூறினர்.

28 பேருக்கு கோவிட் தொற்றி இருப்பதால், நாட்டை முடக்க முடியுமான என கோட்டாபய தெரிவித்துள்ளார். நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஆனால், என்ன நடந்துள்ளது?. பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தாம் தனியாக மே தினக் கூட்டத்தை நடத்த போவதாக ஏப்ரல் 19ஆம் திகதி கூறின.

கட்சிகள் கொழும்பில் மே தினக் கூட்டங்களை நடத்த பொலிஸார் மைதானங்களை ஒதுக்கி கொடுத்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விமல் வீரவங்சவின் கட்சி என்பன தனியாக மே தினக் கூட்டங்களை நடத்த போவதாக அறிவித்தன.

தாமரை மொட்டின் இதழ்கள் கழன்று விடும் என்பதால், கை சின்னத்தை பயன்படுத்தி தாமரை மொட்டின் இதழ்களை கழற்றுவார்கள் என்பதால், அரசாங்கம் அச்சமடைந்தது. ஆளும் கட்சியால் மே தினக் கூட்டத்தை நடத்த முடியாமல் போகும். கூட்டணிக் கட்சி உடைந்து பிரிந்து போகும்.

இதனை மூடிமறைக்க அனைத்து இடங்களிலும் கோவிட் பரவுகிறது என்ற விடயத்தை கூறி பீதியை உருவாக்க ஆரம்பித்தனர். இந்த பீதி புத்தாண்டு காலத்தில் இருக்கவில்லை. கோவிட் குழு கூடவில்லை.

கிராமத்துடன் உரையாடல் என்ற எதுவும் நடக்கவில்லை. புலி புலி வருகிறது எனக் கூறி இறுதியில் என்ன நடந்த. உண்மையில் புலி வரும் போது எவரும் வரவில்லை.

புலி அடித்து இறந்து போயினர். அரசாங்கம் கோவிட்டை பயன்படுத்தி இப்படியான விடயங்களை செய்தால், அரசாங்கமும் கோவிட்டால் இறந்து போவதை தடுக்க முடியாது என எச்சரிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US