நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மண்டலாபிஷேக உற்சவம்
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்தின் மண்டலாபிஷேக நிறைவு உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
குறித்த 33 குண்ட பக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகமானது இன்று (20.02.2024) 09.38 மணிமுதல் 11.20 மணி வரையான சுபவேளையில் சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.
விஷேட அபிஷேக ஆராதணை
இதன்போது நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் மற்றும் ஏனைய பாரிவார தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதணைகள் இடம்பெற்று உள்வீதி ஊடாக சிம்ம வாகனத்தில் வீற்று அம்பிகை பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.

இந்த உற்சவத்தில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு மண்டலாபிஷேக உற்சவ அருட்கடாச்சத்தினை பெற்றுச்சென்றுள்ளனர்.
அத்துடன் மண்டலாபிஷேக கிரியைகளை சிவஸ்ரீ ப.மு.பால குமாரகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 16 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam