யாழ்.பண்ணை பகுதியில் அமைக்கப்பட்ட அம்மன் சிலை குறித்து சித்தார்த்தன் கேள்வி!
வட கிழக்குப் பகுதிகளில் யாருடைய அனுமதியின்றி பௌத்த விஸ்தரிப்புக்காகப் புத்தர் சிலைகளை நிறுவ முடியுமானால், 90 வீதமான சைவ மக்கள் வாழும் யாழ். குடநாட்டில் ஏன் நாகபூஷணி அம்மன் சிலையை இந்துக்கள் கேந்திரமான இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபடக்கூடாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். பண்ணை சுற்று வட்டப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூஷணி அம்மனைக் அடையாளப்படுத்தும் திருவுருவ சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றமை குறித்து நேற்றைய தினம் (16.04.2023) வினவியபோதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், சிங்கள-பௌத்த மதத்தினர், தரிசு நிலங்களிலும் மலைச் சிகரங்களிலும் யாருடைய அனுமதியுமின்றி உத்தரவுகளைப் பெறாமலும் புத்தர் சிலைகளை நிறுவிக் கொண்டிருக்கிறார்கள்.
காணிகள் சுவீகரிப்பு
தொல்பொருள் பௌத்த பூர்வீகம் என்ற காரணங்களை காட் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அடாவடித்தனம் கொண்டு புத்தர் சிலைகளை நிறுவி வருகிறார்கள்.
நீதிமன்ற ஆணை மீறப்படுகிறது. பௌத்த குருமார் குழுக்குழுவாக வந்து எந்த சட்ட திட்டங்களுக்கும் மதிப்பளிக்காமல் அத்துமீறி சிலைகளை நிறுவிக் கொண்டிருக்கிறார்கள்.
விகாரைகளை விஸ்தரிப்புக்காகத் தனியாருக்குச் சொந்தமான காணிகளைச் சுவீகரிக்க ஆணையுடன் வருகிறார்கள்.
அண்மைக்காலமாக வட கிழக்கிலுள்ள பல இடங்களில் இந்த அநியாயங்கள் கட்டுமீறி அடம் பெற்றுவருகிறத அரசாங்கம் கண்ணை மூடி பார்த்துக்கொண்டிருக்கிறது.
பௌத்த மயமாக்கல்
இந்து மதத்தவரோ இஸ்லாமியர்களோ அன்றி கிறிஸ்தவர்களே இவ்வாறு நடந்து கொள்வதில்லை. நடக்க அனுமதிக்கப்படுவதுமில்லை. அதுவுமன்றி இந்துக்கள் தமது தெய்வங்களுக்கான சிலைகளை நிறுவுவதாக இருந்தால் ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்து மேற்கொள்ள வேண்டிய கருமங்கள் அதிகமுள்ளன.
அவ்வாறு இல்லாமல் பௌத்த குருமார், இனவாதிகள் பௌத்த மயமாக்கல் என்ற தீவிர எண்ணத்துடனும் சிங்கள இனப்பரம்பலை பெருக்குதல் என்ற நோக்கத்துடனும் வடகிழக்கை ஆக்கிரமித்து புத்தர் சிலைகளை நிறுவி வருகிறார்கள்.
ஒற்றுமைக்குக் குந்தகம்
இந்து மதத்துக்கு எதிரான தொல்பொருள் கெடுதிகளை மேற்கொண்டு வரும் நிலையில், முற்று முழுதாக இந்தமக்களைக் கொண்ட பிரதேசத்தில் அம்மன் சிலையொன்றை நிறுவக்கூடாது என்று பொலிஸார் சட்டத்தைக் கையில் எடுப்பது இந்நாட்டில் மதபாகுபாட்டையும் இன முறுகல்களையும் கொண்டுவரும் செயலாகும்.
இவர்களின் இந்த நடவடிக்கைகள் இன ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்
மாத்திரமன்றி இந்து மக்கள் வாழும் பிரதேசத்தில்வைத்து சிலையை அகற்றச் சொல்வது
நியாயமற்ற செயலாகும். நீதிமன்றுக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டாலும்
நீதிமன்று என்ன கூறுகிறதோ அதைப்பொறுத்துத்தான் தீர்மானங்களுக்கு வர முடியம் எனத் தெரிவித்துள்ளார்.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
