சப்த தீவுகளிலும் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர் பவனி
சப்த தீவுகளிலும் தனிப்பெரும் சரித்திரப் புகழ் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இரத உற்சவம் இன்று இடம்பெற்றுள்ளது.
வசந்த மண்டப பூசைகளுடன் ஆரம்பமாகிய விசேட பூஜையுடன் அம்பாளுக்கு வழிபாடுகள் நடைபெற்று வசந்த மண்டபத்திலே விநாயகப் பெருமான் முருகன் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று மூன்று மூர்த்திகளும் உள்வீதி எழுந்தருளினர்.
மேலும், வெளி வீதி எழுந்தருளி தனித் தனி தேரிலே ஏறி முத்தேர் பவனியாக நைனாதீவு நாக பூசணி அம்மனுக்கு ரத உற்சவம் இனிதே இடம்பெற்றுள்ளது.
நாகபூசணி அம்மன் திருவிழா
16 தினங்களை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய திருவிழாவானது கடந்த 07.06.2024 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் இன்று தேர் உற்சவமும் ( 15 ம் நாள்) 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.
மேலும், திருவூஞ்சலும் நடைபெற உள்ளது. மறுநாள் 22ஆம் திகதி சனிக்கிழமை இரவு பூங்காவனத் திருவிழாவும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தெப்போற்சவம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




















கார்க் தீவில் அமெரிக்க இராணுவத்திற்கு காத்திருக்கும் பேராபத்து - ட்ரம்பிற்கு ஈரான் புகட்டப்போகும் வரலாற்றுப் பாடம்
டிரம்பை உன்னிப்பாகக் கவனிக்காத இலங்கை அரசாங்கம்! மூடப்படும் நிலையில் தொழிற்சாலைகள் - பகிரங்க குற்றச்சாட்டு