நடுக்கடலில் பயணிகளுடன் தத்தளித்த நாகை - யாழ் கப்பல் சேவை
நாகையிலிருந்து இலங்கைக்கு சென்ற பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பலில் 17 ஊழியர்கள் உட்பட 95 பேர் பயணம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை மாற்றம்
இந்தக் கப்பல் சேவையானது வானிலை மாற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் மார்ச் 1 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு 78 பயணிகளுடன் புறப்பட்டது.
வேளாங்கண்ணிக்கு தென்கிழக்கே 15 மைல்கல் தொலைவில் கப்பல் சென்றபோது கடல் சீற்றம் அதிகமானதனால் கப்பல் கடலில் தத்தளித்துள்ளது.
இந்தநிலையில், கப்பல் அவசர, அவசரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு திரும்பிச் சென்றுள்ளது.
இரத்து
இதை தொடர்ந்து நேற்று (2) மற்றும் இன்று (3) கப்பல் போக்குவரத்து இரத்து செய்யப்படுவதாக கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கப்பல் நிர்வாகத்தின் அலட்சியமான போக்கால் இது போன்ற சம்பவம் நடந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |