முன்பே கணிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முடிவு: கொழும்பில் சிங்களவர்கள் படையெடுக்கும் இடத்தை பற்றி தெரியுமா..!
கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் நடந்த காலப்பகுதியில் இலங்கையின் ஜாதகத்தை பார்க்குமாறு கூறப்பட்டதாகவும், அப்போது அடுத்த வருடம் அதாவது 2009இல் யுத்தம் முடிவடைந்து சமாதானம் கிடைத்துவிடும் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாமலாக்கப்படும் எனவும் கணித்து கூறியதாகவும் பிரபல நாடி ஜோதிடர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யுத்தம் முடிவிற்கு வந்து விடும் என அப்போது கூறிய விடயமானது பத்திரிகைகளில் கூட பிரசுரமாகியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவரின் கட்டை விரலின் ரேகையை பதிய செய்து அதன் மூலம் அவருக்கு நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது. நாடி ஜோதிடம் என்பது கைரேகையை கொண்டு, அவரைப்பற்றி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டதாக கருதப்படும் ஏடுகளைக் கண்டுபிடித்து அதிலுள்ள அவர் தொடர்பான விடயங்களை வாசித்து விளக்கி கூறுவதாக நம்பப்படும் ஒரு கலையாகும்.
இதற்காக பயன்படுத்தப்படும் 2000 ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகளை சப்தரிஷிகள் எனப்படும் அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்பிரிகு, வசிஸ்தர் மற்றும் வால்மீகி ஆகிய ரிஷிகள் எழுதியதாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நாடி ஜோதிடம் பார்ப்பதற்கு, தமிழர்களை விடவும் சிங்களவர்களே அதிகளவு முனைப்பினை காட்டி வருவதாக நாடி ஜோதிடர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தொகுப்பினை இவ்வாரத்திற்கான பயணம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri