தென்மராட்சி மண்ணில் எழுச்சி கொள்ளும் பொத்துவில் - பொலிகண்டி மக்கள் போராட்டம்
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாண மண்ணை வந்தடைந்தது.
தமிழ் பேசும் சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் தாயகத்தில் பேரெழுச்சியுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டமானது இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை அடைந்து பெரும் எழுச்சியுடன் முடிவிற்கு வரவுள்ளது.
இந்த நிலையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான ஐந்தாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியானது வரலாறு காணாத மக்கள் வெள்ளத்துடன் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.
கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பேரணி பரந்தன், பளை, முகமாலையை வந்தடைந்தது.
பேரணியை முகமாலையில் வரவேற்று பெரும் திரளான மக்கள் இணைந்து கொண்டனர்.
இப்பேரணி கொடிகாமம், சாவகச்சேரி,கைதடி, நாவற்குழி, அரியாலை, யாழ்ப்பாணம் மாநகரம், யாழ்ப்பாணம் பொதுநூலகம்,யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம், யாழ். பல்கலைக்கழகம், நல்லூர் தியாகதீபம் நினைவிடம், கல்வியங்காடு, கோப்பாய், நீர்வேலி, வல்லைவெளி, புறாபொறுக்கிச் சந்தி, கரணவாய், நெல்லியடி, மாலுசந்தி, மந்திகை, பருத்தித்துறை, திக்கம், அல்வாய், வதிரிச்சந்தி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை தீருவில் வெளி, வல்வெட்டித்துறை நகரம், நெடியகாடு ஊடாக பொலிகண்டி சென்று நிறைவடையும்.










நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
