இலங்கையை அதிர வைக்கும் மர்ம மரணங்கள்! சாட்சியங்களை அழிக்கும் மர்மம்! அடுத்த இலக்கு யார்.....!

CID - Sri Lanka Police Mahinda Rajapaksa Crime Branch Criminal Investigation Department Money Death
By Vethu May 12, 2026 11:56 AM GMT
Report

அண்மையில் கொழும்பில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகின்றன.

கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரின் வீட்டில் கபில உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வந்தாலும், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் பாரிய முறைகேடுகள் நடந்தமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கபில கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கே அஞ்சாத மகிந்த! விசாரணை ஆணைக்குழுவில்..

விடுதலைப் புலிகளின் தலைவருக்கே அஞ்சாத மகிந்த! விசாரணை ஆணைக்குழுவில்..

மகிந்தவுக்கு வந்த அழைப்பு 

கபிலவிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது ராஜபக்ச தரப்புக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை குற்றப் புலனாய்வு நிதி மோசடி பிரிவு விசாரணைக்கு அழைத்திருந்தது.

இலங்கையை அதிர வைக்கும் மர்ம மரணங்கள்! சாட்சியங்களை அழிக்கும் மர்மம்! அடுத்த இலக்கு யார்.....! | Mystery Surrounding Kapila S Death

இவ்வாறானதொரு நிலையில் கபில மர்மமான நிலையில் உயிரிழந்தமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சியின் போது மோசடியில் ஈடுபட்ட எவரையும் பாரபட்சம் இன்றி தண்டிக்கப் போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சூளுரைத்துள்ளார்.

இவ்வாறான நிலையில் மகிந்த கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பான வாதங்கள் தீவரம் பெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பூட்டிய அறைக்குள் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட போதும், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் தரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கபிலவின் கழுத்தில் காணப்பட்ட பட்டி, உயிரிழப்பதற்கு முன்னர் ஊழியர் ஒருவரினால் அவருக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பாரிய நிதி மோசடி

எயார்லைன்ஸிற்குள் நடந்த பாரிய நிதி மோசடியின் பிரதான சாட்சியாளரான கபிலவின் சாட்சியம் ராஜபக்சர்களுக்கு பெரும் ஆபத்தாக மாறலாம் என்ற அச்சம் காரணமாக மர்ம நபர்களால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையை அதிர வைக்கும் மர்ம மரணங்கள்! சாட்சியங்களை அழிக்கும் மர்மம்! அடுத்த இலக்கு யார்.....! | Mystery Surrounding Kapila S Death

அதனை உறுதிப்படுத்தும் வகையில் மகிந்தவின் செயற்பாடும் அமைந்துள்ளமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த மோசடி குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், கபில சந்திரசேனவின் மரணத்தின் பின்னர், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக மகிந்த தெரிவித்துள்ளமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

முன்னைய ஆட்சிக்காலங்களில் தமக்கு எதிராக செயற்படும் நபர்களை கொலை செய்து, கடலில் வீசுவதாகவும், கோட்டபாய வீட்டில் வளர்க்கப்பட்ட முதலைக்கு இரையாக போடப்பட்டதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் வெளியாகி இருந்தன.

தற்போது எதிர்க்கட்சியாக செயற்படும் ராஜபக்ச குடும்பத்தினர், பல்வேறு மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் கபிலவின் மரணம் பெரும் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான உண்மை நிலைப்பாட்டை சமகால அநுர அரசாங்கம் அம்பலப்படுத்தும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள்

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! இலங்கையிலும் சடுதியாக அதிகரிக்கவுள்ள விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! இலங்கையிலும் சடுதியாக அதிகரிக்கவுள்ள விலை

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Vethu அவரால் எழுதப்பட்டு, 12 May, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US