நீக்கப்பட்ட பக்கங்கள்! பிள்ளையானை சிறையில் சந்தித்த மர்ம நபர்கள்
உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு பின்னால் இருந்த மூளையாகச் செயல்பட்டவர்களைக் காப்பாற்ற ஒரு சார்புடைய ஊடகங்களும் ராஜபக்ச -ரணில் கூட்டணியும் முயற்சிப்பதாக தற்போது குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்காக ஆரம்பத்தில் மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்ட பிள்ளையான், அதே கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது நெருங்கிய கூட்டாளியான கலீல், இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் ஆவார்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த கலீல், சஹ்ரானுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டிருந்தார்.
சிறையில் இருந்தபோது, பிள்ளையானும் கலீலும் சஹ்ரானின் குழுவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்ததாக சனல் 4 மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் காணப்படும் பின்னணி தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னத்தை நேர்காணல் செய்தது.
இதில் பல விலகாத மர்மங்களுக்கு பதில் வழங்கிய அவர், பிள்ளையானை சிறையில் சந்தித்த மர்ம நபர்கள் தொடர்பிலும் பல தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்...

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
