புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்ட மர்ம பொதி: தீவிர விசாரணையில் பொலிஸார்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் மர்மமான பொதி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(18.01.2024) இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லிகைதீவு காட்டுப்பகுதியில் மர்மமான பொதியொன்று காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மர்ம பொதி
இதனையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹேரத் தலைமையிலான
பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த பொதியினை மீட்டுள்ளனர்.
இதன்போது கண்டெடுக்கப்பட்ட பொதியினுள் 50 ரக துப்பாக்கி ரவைகள் 37 மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பொதி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவ இடத்தில் மர்ம பொதியினை விட்டுச்சென்ற நபர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கபெறாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri