வவுனியா நகரில் மர்ம பொதியால் பரபரப்பு - விசேட அதிரடிப்படையினர் சோதனை
வவுனியா நகரில் காணப்பட்ட மர்ம பொதியால் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வருகை தந்து சோதனை நடத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வவுனியாவில் அமைந்துள்ள கொப்பேகடுவ சிலைக்கு முன்பாக இன்று (23.07) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கறுப்பு யூலை கலவரத்தை நினைவு கூர்ந்தும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும் போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
போராட்டம் முடிவடைந்து சிறிது நேரத்தில் குறித்த பகுதியிலிருந்த கொப்பேகடுவா சிலை முன்பாக இராணுவச் சீருடையில் தயாரிக்கப்பட்ட பை ஒன்று காணப்பட்டது.
இதனை அவதானித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸார் குறித்த மர்ம பொதி அருகில் எவரும் செல்ல விடாது பாதுகாத்துள்ளனர்.
அதன்பின்னர், விசேட அதிரடிப் படையினரின் குண்டு செயலிக்க செய்யும் பிரிவினரை வரவழைத்து, குறித்த சிலை அருகிலிருந்த வர்த்தக நிலையங்களைச் சிறிது நேரம் மூடியதுடன், கண்டி வீதி ஊடான போக்குவரத்தையும் 20 நிமிடங்கள் தடை செய்து குறித்த பொதியைக் குண்டு செயலிழக்கச் செய்யும் கருவியின் உதவியுடன் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது குறித்த பொதியில் ஆலய துண்டுப் பிரசுரங்களும், அதிஸ்டலாப சீட்டு ரிக்கற்றுக்களும், வேறு தாள்களும் காணப்பட்டன. அதனை மீட்ட அதிரடிப்படையினர் அவற்றை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து நகரம் வழமைக்குத் திரும்பியிருந்தது.











அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
