மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்: இராணுவ சிப்பாய் கைது!
கண்டி அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய பெண்ணின் சடலம், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள வயல் நிலத்தின் சதுப்பு நிலத்தில் இருந்து கிராம மக்களால் சனிக்கிழமை (11) மீட்கப்பட்டது.
குறித்த பெண்ணின் கணவர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த வேளையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் தீவிர விசாரணை
பொலிஸ் நாயின் உதவியுடன் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் சந்தேக நபரின் வீடும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
38 வயதுடைய சந்தேக நபர், முன்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்தமையினால், தற்போது இலகுரக கடமைகளில் இராணுவத்தில் பணிபுரிவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam