வெளிநாடொன்றில் மாயமான இராணுவ உலங்கு வானூர்தி : தேடும் பணி தீவிரம்
கம்போடியா(Cambodia) நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி (helicopter) நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது காணமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் பர்சட்ஹட் காங் மாகாணங்களுக்கு இடையே அமைந்துள்ள கர்டமன் மலைப்பகுதியில் உலங்கு வானூர்தி பறந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மீட்புக்குழுவினர்
இதன்போது ஹெலிகாப்டரில் 2 வீரர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, உலங்கு வானூர்தியை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக உலங்கு வானூர்தி மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் 2 வீரர்களுடன் மாயமான உலங்கு வானூர்தியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றைமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |