சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்து மதுபோதையில் மர்ம கும்பல் அட்டகாசம்!
வவுனியா - குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று மதுபோதையில் நுளைந்த மூவர் அடங்கிய கும்பல் பூங்காவில் பணியாற்றிவரும் முதியவர் உட்பட இருவரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி ஒன்றில் சிறுவர் பூங்காவிற்குள் நுளைந்த குறித்த குழுவினர் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த முதியவரை தாக்கியுள்ளனர்.
இதனை அவதானித்த நபர் ஒருவர் அதனை தடுக்க முற்பட்டபோது அவரையும் தாக்கி காயப்படுத்தியதுடன், அவரது பெறுமதிக்க தொலைபேசியையும் உடைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக அவசர பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த போதும் நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சமூகமளிக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam