மோட்டார் சைக்கிள்களை திருடும் மர்ம கும்பல் கைது
நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடும் கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
"களுதர போம்புவல புஸ் கோட்டா" என்று அழைக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் தலைமையிலான குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்
இவர்களுடன் 5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மோட்டார் சைக்கிள் திருத்துபவரும், இரண்டு மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களும் அடங்குவர்.
சந்தேகநபர்களால் திருடப்பட்ட 11 மோட்டார் சைக்கிள்கள், பிரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




