வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையின் பிரபல கோடீஸ்வரர் கொலை பின்னணியில் மனைவி! வெளிவரும் தகவல்கள்

Colombo Sri Lanka Supreme Court of Sri Lanka Sri Lanka Police Investigation Indonesia
By Dhayani Feb 21, 2023 12:03 AM GMT
Report

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் பிரதான உர இறக்குமதி நிறுவனமான ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளரான கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்கவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உறுதி செய்துள்ளது.

இதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் உண்மைகளை அறிக்கை செய்துள்ளது.

ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் இயக்குனர் ஜனவரி 05 அன்று இந்தோனேசியாவில் உயிரிழந்த நிலையில் ஒனேஷ் சுபசிங்கவின் சகோதரரான சுபாஷ் சுபசிங்கவின் முறைப்பாட்டின் பிரகாரம், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையின் பிரபல கோடீஸ்வரர் கொலை பின்னணியில் மனைவி! வெளிவரும் தகவல்கள் | Mysterious Death Of Sl Businessman In Indonesia

ஐந்து பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

உயிரிழந்தவர் தொடர்பில் ஐந்து ஊழியர்களிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் உண்மைகளைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி, முறைப்பாட்டாளரான சுபாஷ் சுபசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஒனேஷ் சுபசிங்க, பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரொசலியா நஸ்கிமோன்டோ கார்டோசோ டி சில்வா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இருவருக்கும் நான்கு வயதுடைய பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகள் பொரளை - அல்விட்டிகல மாவத்தையில் உள்ள பிரித்தானிய சர்வதேச பாடசாலையில் கல்வி கற்று வருவதாகவும் அவரது சகோதரர் கொழும்பு ரொஸ்மீட் பிளேஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருவதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையின் பிரபல கோடீஸ்வரர் கொலை பின்னணியில் மனைவி! வெளிவரும் தகவல்கள் | Mysterious Death Of Sl Businessman In Indonesia

உயிரிழந்தவரின் சகோதரியின் கணவர் ஷியாம் லால் அரவிந்தா அளித்த வாக்குமூலத்தில், "ஒனேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், ஒனேஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்" தெரிவித்துள்ளார்.

மேலும், ஒனேஷ் சுபசிங்கவின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணான தேவதாசா மேகலா காந்தி, ஒனேஷுடன் அவரது எப்போதும் சண்டையிடுவதாகவும், என்னால் இலங்கை உணவைச் சாப்பிட முடியாது. இலங்கையில் இருக்க முடியாது. நான் என் நாட்டிற்கு செல்ல விரும்புகிறேன். என்னை போக விடவில்லையென்றால் என்றாவது ஒரு நாள் உன்னை கொன்று விடுவேன் என கூறிவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொலைக்கான சதித்திட்டம்

மேலும் ஒரு நாள் தனது மனைவி தன்னை கொன்றுவிடுவாளோ என்று பயந்து, ஒரு நாள் தன்னையும், இன்னொரு வீட்டுப் பணிப்பெண் பிரியங்கனியையும் வரவழைத்து, குழந்தையையும்,தன்னையும் கொஞ்சம் அவதானித்துக்கொள்ளுமாறு அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டின் மற்றுமொரு பணிப்பெண்ணான தேவகே புஷ்பராணி அளித்த வாக்குமூலத்தில், அந்தத் தம்பதியரின் குழந்தையைப் பராமரித்தது தானே என்றும், குழந்தைக்கு சுமார் ஒரு வயது ஆன பிறகு, அந்தப் பெண்மணியும் கணவரும் அடிக்கடி சண்டை போட ஆரம்பித்தார்கள்.

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையின் பிரபல கோடீஸ்வரர் கொலை பின்னணியில் மனைவி! வெளிவரும் தகவல்கள் | Mysterious Death Of Sl Businessman In Indonesia

ஒரு நாள் ஒனேஷைக் கொன்றுவிடுவேன் என்று ரோசா கூறியதைக் கேட்டதாகவும், இருவரும் எப்போதும் சண்டையிட்டுக் கொள்வதாகவும் தெரிவித்ததாக குற்றப்புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த கொலைக்கான சதித்திட்டம் இலங்கைக்குள் இருந்ததா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை குற்றவியல் சட்டத்தின் 113 மற்றும் 296ஆவது பிரிவின் பிரகாரம் 32ஆவது பிரிவின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதற்கமைய, முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது. 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US